முழுநீள திரைப்படம் பார்த்த திருப்தி கொடுக்கும் “ஜதி” ஆல்பம்

மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் “ஜதி”

பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின் சிறிய மகள், பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் முயற்சிக்கும் போது, உன்னால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியாது. தகுதிக்கு மேல் ஆசைப்படாதே எனக்கூறி, விரட்டப்படுகிறார்கள்.

இதைப் பார்த்த மற்றொரு குரு, அந்தச் சிறுமியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு, அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அரங்கேற்றம் செய்து வைக்கிறார்.

மகளின் கனவை நிறைவேற்றும் தாயாக கோமதி நடித்துள்ளார். மகளாக சரண்யாஶ்ரீ நடித்துள்ளார். கற்றுக் கொடுக்கும் குருவாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் முரளி நடித்துள்ளார்.

ஒரு முழுநீள திரைப்படம் பார்க்கும் உணர்வை இயக்குனர் ரசல் ஏற்ப்படுத்தி உள்ளார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜூ ஜேக்கப் இசை அமைத்துள்ளார். நடனம் வி.அர்ச்சனா ராம், எடிட்டிங் வீர செந்தில்ராஜ், கிரியேட்டிவ் ஹெட் கே.பாஸ்கர், புரொடக்ஷன் கன்ட்ரோலர் டாக்டர் பி.கமலக்கண்ணன், ஸ்டில்ஸ் கே.பி.பிரபு, பிஆர்ஓ கோவிந்தராஜ்.

மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள “ஜதி” (Jathi) ஆல்பத்தை, Vasy Music ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடுகிறது!

PRO_கோவிந்தராஜ்