ஜப்பான் விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், விஜய் மில்டன், சுனில், கே.எஸ்.ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், ஆகியோர் நடிப்பில் கார்த்தியின் 25வது படமாக வெளிவந்துள்ள படம் “ஜப்பான்”.

பிரபலமான கொள்ளைக்காரனாக இருக்கும் கார்த்தி, தான் கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, மட்டுமல்லாமல் ஆடம்பரமாகவும் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கோவையில் இருக்கும் ஒரு பெரிய நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. அந்த கொள்ளை சம்பவத்தின் பழி கார்த்தி மீது விழுகிறது. தான் செய்யாத குற்றத்திற்காக போலீஸ் தன்னை பிடிப்பதற்கு துரத்த அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார் கார்த்தி. தப்பிப்பதோடு மட்டும் இருந்துவிடாமல் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஜப்பான்’ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இயக்கம்: ராஜு முருகன்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு

ஒளிப்பதிவு : ரவிவர்மன்

எடிட்டர் : பிலோமின் ராஜ்