ஜமா விமர்சனம்

லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரிப்பில், பாரி இளவழகன் இயக்கத்தில், அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன், ஏ.கே.இளவழகன், காலா குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜமா.

பாரி இளவழகன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் குத்துக் கலைஞர் இவர் தெருக்கூத்தில் பெண் வேடமிட்டு நடிப்பதன் மூலம் பெண்களுக்கான நடை உடை பாவணங்கள் இருப்பதால் அவரை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்.

தெருக்கூத்து கலையில் அவரின் வாத்தியாரான சேத்தன் ஜமாவை நடத்தி வருகிறார்.

பாரி இளவழகனின் அம்மா கே வி என் மணிமேகலைக்கும் மறைந்த ஸ்ரீ கிருஷ்ண தயால் அப்பாவிற்கும் தன்மகன் அர்ஜுனன் போன்ற முக்கியமான ஆண் வேடங்களை போட்டு நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

சேத்தனின் மகள் அம்மு அபிராமிக்கும் பாரி இளவலர்களுக்கும் சிறுவயதிலிருந்தே ஒரு விதமான அன்பு இருந்து வந்தது.

பாரி இளவழகன் அம்மு அபிராமியை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டு செல்லும்போது சேத்தன் அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அதுமட்டுமில்லாமல் பாரி இளவழகனின் வளர்ச்சியை தடுப்பதிலும் பெரும் முயற்சி செய்கிறார். அதற்காக ஆண் வேடங்கள் மற்றும் பெரிய வேடங்கள் எதுவும் தராமல் பாரி இளவழகனை நிராகரிக்கிறார்.

அம்மு அபிராமி அப்பாவின் பேச்சை மீறியும் பாரி இளவழகனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தும் அதனை வேண்டாம் என்று சொல்கிறார் பாரி.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கலையில் முன்னேறி தனி ஜமா உருவாக்கி அதில் முன்னேற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் இதற்கு பல தடங்கல்கள் ஏற்படுகிறது இதிலிருந்து பாரி எப்படி வெளியே வருகிறார் ஜமாவை மீட்டாரா அம்மு அபிராமி திருமணம் செய்தாரா என்பதே ஜமா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இசை : இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : கோபி கிருஷ்ணா
எடிட்டர் : பார்த்தா
வெளியீடு : பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்சாண்டர்
மக்கள் தொடர்பு : சுரேஷ்சந்திரா