ஜெய் விஜயம் விமர்சனம்

ஜெய்சதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில், ஜெய் ஆகாஷ், அக்ஷயா கந்தமுதன், ஏசிபி ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், அட்சயா ரே ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜெய் விஜயம்.

ஜெய் ஆகாஷ், Hallucination நோயால் பாதிக்கப்பட்டு நினைவாற்றலை இழந்து விட்டு காவல் நிலையம் சென்று தன் அப்பா, மனைவி, தங்கை என்று சொல்லுகின்ற மூவரும் தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் தன்னுடைய உண்மையான உறவுகள் இல்லை. என்னை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்ல ஆரம்பமாகிறது
பிளாஷ்பேக் கதை சொல்ல கதை.

ஒரு புது வீட்டிற்கு, ஜெய், அவரது மனைவி அக்ஷயா கந்தமுதன், அப்பா, தங்கை குடி போகிறார்கள், மாடியில் ஏதோ சப்தம் கேட்டு, இரவு தூக்கம் கலைந்து சென்று பார்க்கும்போது அங்கு யாரும் இல்லை, அது ஒரு மாய தோற்றம் தான் என்று மனைவி சொல்கிறார்.

இப்படி ஏதோ ஒரு சம்பவம் தினமும் தொடரும்போது ஜெயா காசுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மனைவி மீது சந்தேகம் ஏற்படுகிறது என்று தங்கையிடம் சொல்ல தங்கை அதனை வேறு யாரிடமும் சொல்வதை கவனித்து விடுகிறார் ஜெய் ஆகாஷ்.

அப்பா, மனைவி தங்கை யாருமே உண்மையில்லை அனைவரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்து அதிர்ந்து போன ஜெய்க்கு, நீ ஒரு கொலைகாரன் என்று சொல்கிறார்கள். ஜெய் யாரை கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார் அப்பா மனைவி தங்கை என்று நடிப்பவர்கள் உண்மையில் யார்?

Hallucination என்னும் நோய் ஜெயிக்கு எவ்வாறு வந்தது? அதிலிருந்து விடுபட்டாரா? இல்லையா? என்பதே ஜெய் விஜயம் படத்தோட மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஜெய்சதீஷன் நாகேஸ்வரன்
தயாரிப்பு : ஜெய் ஆகாஷ்
இசை : சதிஷ் குமார், சீனிவாச குமார்
ஒளிப்பதிவு : பால்பாண்டி
எடிட்டிர் : அழகன்மணிகண்டன்
மக்கள் தொடர்பு : வேலு