இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பி
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜே பேபி.
ஊர்வசிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இவர்கள் ஐந்து பேருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வசித்து வருகிறார். ஊர்வசிக்கு வயதாகிவிட்ட காரணத்தால், அடிக்கடி மறதி ஏற்படுகிறது.
வீட்டிலிருந்த நகை எடுத்து மற்றவருக்கு கொடுப்பது, மகனிடம் பணம் வாங்கி மற்றவருக்கு உதவி செய்வது, மற்றவர் வீட்டில் இருக்கும் லெட்டர் பாக்ஸ் இருக்கும் லெட்டர்களை திருடிக் கொண்டு வந்து வீட்டில் வைப்பது, என பல வேலைகள் செய்வதால் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.
ஊர்வசி இப்படி செய்வதால் இவருடைய பிள்ளைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதனால் ஊர்வசியை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு செய்து அங்கு போய் சேர்த்து விடுகிறார்கள்.
ஊர்வசி அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகி வந்தாலும், அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் இவரை விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் வீட்டிக்கு சென்றுவிட தன் பிள்ளைகளுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்பி போய் விடுகிறார்.
ஊர்வசி கொல்கத்தாவில் இருப்பதாக போலீசுக்கு தகவல் வர மகன் தினேஷ் மற்றும் மாறன் இருவரையும் போலீஸ் அழைத்து ஊர்வசியை அழைத்து வருமாறு சொல்கின்றனர். ஏற்கனவே அண்ணன் தம்பி இருவரும் பேசாமல் இருக்கும் நிலையில் இருவரும் சென்று தான் ஊர்வசியை அழைத்து வரவேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.
போலீஸ் கூறியதால் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து கொல்கத்தாவிற்கு சென்று அம்மா ஊர்வசியை அழைத்து வர செல்கிறார்கள்.
மொழி தெரியாத ஊரில் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அம்மாவான ஊர்வசியை அழைத்து வந்தார்களா? இல்லையா? அண்ணன் தம்பிக்குள் இடையே இருந்த பிரச்சனை தீர்ந்து இருவரும் பேசிக் கொண்டார்களா? இல்லையா? என்பதே ஜே பேபி படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா.
தயாரிப்பாளர்கள் : பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சவுதாரி.
இசை : டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு : ஜெயந்த் சேது மாதவன்
எடிட்டிங் : சண்முகம் வேலுச்சாமி
கலை – ராமு தங்கராஜ்
பாடல்கள் : கபிலன் உமாதேவி , விவேக்.
எழுத்து இயக்கம் : சுரேஷ் மாரி
மக்கள் தொடர்பு : குணா