முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு என்பவர், 2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் குறித்து The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh என்கிற புத்தகத்தை வெளியிட்டார். சர்ச்சையை உருவாக்கிய அந்த புத்தகத்தை மையமாக வைத்து திரைப்படமொன்று உருவாகிறது. மொத்தம் 128 கதாபாத்திரங்களுடன் உருவாக இருப்பதாகச் சொல்லபடும் அந்தப் படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுபம் கேர் நடிக்கவிருப்பதாகச் கூறப்படுகிறது.
ஆனால் சோனியா காந்தியின் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது, அந்த வேடத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ராகுல்காந்தியின் வேடத்தில் பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியா- அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஹாலிவுட் நடிகர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் லண்டனில் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.