விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் இடம்பெற்று உள்ளன. இதனை பாஜக தரப்பு தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி பேச்சு சுதந்திரம் இல்லையென்றால் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்ல வேண்டாம் என்றும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என ட்வீட் செய்துள்ளார்.