பேங்க் அக்கௌண்டில் இருந்து பணம் திருடு போகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியா? என்பதே கதை. கதிரவன் (விஷால்) மிலிட்டரி மேன் பயங்கர கோபக்காரர். ஆர்மியில் கோபத்தால் பல பிரச்சினைகளை சந்திக்கும், இவரின் கோபத்தை கட்டுப்படுத்தும் வகையில் மனநல மருத்துவர் சமந்தாவிடம் இருந்து ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வரச் சொல்கிறார் உயரதிகாரி.
மனநல மருத்துவராக வரும் சமந்தா, குடும்பத்தினருடன் சில நாட்கள் இருந்தால் தான் சர்ட்டிபிகேட் தருவேன் என்கிறார் விஷாலிடம். அதற்காக தன் கிராமத்துக்கு செல்கிறார் விஷால். அப்போது தங்கையின் திருமணத்திற்காக ஒரு கடை வைத்திருப்பதாக பொய் சொல்லி லோன் வாங்க வேண்டி சூழ்நிலை.
அதன் படி லோன் தொகை 6 லட்சம் இவரது அக்கௌண்டிற்கு வருகிறது. ஆனால் பணம் வந்த அடுத்த நாளே மொத்த பணமும் காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் விஷால் இதற்கான காரணம் யார்? என கண்டறியும் பொழுது தெரியவரும் காரணங்கள் விஷாலுக்கு மட்டும் அல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பணம் காணாமல் போனதற்கு பின்னணியில் செயல்படுவது யார்? இதனால் என்ன என்ன பிரச்சனைகளை விஷால் சந்திக்கிறார்? கடனை எப்படி அடைத்தார்? என்பதே இரும்புத் திரை படத்தின் மீதி கதை
மிலிட்டரி மேனாக விஷால் அசத்தியிருக்கிறார். ஏன்டா கோடிக்கணக்குல லோன் வாங்குனா கேட்க துப்பில்லை. விவசாயிகள் லோனு கேட்டா அவன் திருப்பி கொடுக்கலேன்னா அவன என்னவெல்லாம் பண்னுறீங்க. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார். கதாநாயகி வேண்டும் என்பதற்காக சமந்தா வந்து போகிறார் அவ்வளவுதான்.
வில்லன் வேடத்திலும் ஆக்சன் கிங் அர்ஜீன் கலக்கியுள்ளார். ஒய்ட் டெவிலாக வந்து மிரட்டியுள்ளார். ரோபோ சங்கர் தன் பங்குக்கு சிரிக்க வைத்துவிடுகிறார். டெல்லி கணேஷ், காளி வெங்கட் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். விஷாலின் தங்கையாக வருபவர் கிராமத்து பெண்ணாக வந்தாலும் வார்த்தைகளில் தெளிவில்லை.
மொத்தத்தில் இரும்புத்திரை அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்த கூடிய படமாகவும் உள்ளது.
நடிகர்கள் : விஷால், சமந்தா, அர்ஜீன், காளி வெங்கட், ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் மற்றும் பலர்
இயக்கம் : பிஎஸ். மித்ரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : ஜார்ஜ்
எடிட்டிங் : ரூபன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்