இறுகப்பற்று விமர்சனம்

எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, கோபிநாத், தங்கபிரபாகரன் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்நதி, சானியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இறுகப்பற்று’.

விதார்த் தன்னோட மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். விதார்த்தின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சி அடைகிறார் அபர்ணதி, இதனால் மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பிரச்சனைகளுக்கும் சொல்லி அதற்கான தீர்வை நாடுகிறார். அவர் கூறிய ஆலோசனைக்குப் பிறகும் கூட விதார்த் விவாகரத்து பெறுவதில் பிடிவாதமாக இருக்கிறார்.

இன்னொரு புறம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ, தன்னோட மனைவி சானியா தன்னைவிட்டு எப்பவுமே விலகி இருக்கிறார் என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஆலோசனைக்கு போகிறார்.

இந்த இரண்டு தம்பதிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன்னிடம் வரும் தம்பதிகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் போல், தனக்கும், தனது கணவருக்கும் இடையே வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், தனது குடும்ப வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருகிறார். ஆனால், விக்ரம் பிரபு தன்னோட மனைவி தனது வேலையையும் வாழ்க்கையையும் ஒன்றாக பார்க்கிறார் என்று அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீது கோபப்பட்டு அவரை விட்டு விலகுகிறார்

விதார்த், அபர்ணதியை விவாகரத்து செய்தாரா? இல்லையா? ஸ்ரீ – சானியா பிரச்சனை சரியாகி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு இவர்களுக்கிடையே ஏற்பட்ட இடைவெளி விலகி இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே ‘இறுகப்பற்று’ படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, கோபிநாத், தங்கபிரபாகரன்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

இயக்கம் : யுவராஜ் தயாளன்

ஒளிப்பதிவு : கோகுல் பினாயின்