நேச்சுரல்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஐரிஸ் கிளாமின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

நேச்சுரல்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஐரிஸ் கிளாமின் முதலாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி மூலம் எதிர்கால பிரபலங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தது

சென்னை, 28th ஜூலை 2019: நேச்சுரல்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஐரிஸ் கிளாம் தனது முதலாம் ஆண்டு நிறைவு விழாவை சென்னை சவேரா ஓட்டலில் சிறப்பாக கொண்டாடியது.

 ஐரிஸ் கிளாம் ஆடை அலங்கார துறையில் சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. எதிர்கால ஆடை மற்றும் அலங்கார தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் 4 `பேட்ச்’களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு பயிற்சியை அளித்தது. இதன் 4வது பேட்ச் பயிற்சியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாக அமைந்தது. ஏனெனில் இது 8 வார தீவிர பயிற்சியின் முடிவை குறித்ததோடு அவர்களுக்கு நிபுணத்துவமிக்க பயிற்சியாளர்களால் அறிவுரையும் வழங்கப்பட்டது.  சவேரா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட நடிப்பு, பாலிவுட் நடனம், சஞ்சய் அஸ்ரானியின் கருப்பொருளைக் கொண்ட ஆடை அலங்கார அணி வகுப்பு ஆகியவற்றை செய்து காண்பித்தனர். 

எதிர்கால மாடல்கள், நடிகர்கள் மற்றும் மேடை ஆளுமை நிறைந்தவர்களை உருவாக்கும் வண்ணம் ஐரிஸ் கிளாம் சிறப்பு பயிற்சியை அளித்தது. ஐரிஸ் கிளாம் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சாதனையாளர்கள் மற்றும் தலைவர்களாக இருக்கும் நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சியை அளித்தது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு  தொழில்முறை அணுகல், அலங்காரம், நம்பிக்கை, சமநிலையில் இருத்தல், நடிப்பு, நடனம், ஆளுமை வளர்ச்சி ஆகியவை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

இதில் பங்கேற்றவர்களுக்கு கவர்ச்சி உலகில் முக்கிய நிபுணர்களாக விளங்கும் வகையிலான பாடத்திட்டம் பல பரிமாணங்களை உள்ளடக்கி இருந்தது. 

அலங்கார பயிற்சிக்காக `பிடா’ ஸ்டைலிங் பள்ளி, நாகரீக ஆடை அலங்காரத்திற்காக சஞ்சய் அஸ்ரானி, புகைப்படத்திற்காக ரேஷம், தொழில்முறை அணுகலுக்காக நந்திதா பாண்டே, நடன பயிற்சிக்காக குயின் கோப்ரா டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர்களை கொண்டு  சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் அக்கீனம் ஆக்டிங் அகாடமியை சேர்ந்த ராஷ்மன் குமார் இயக்கிய குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. 

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங்கள் அடங்கிய ஒரு போர்ட்போலியோவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நிகழ்வு மேலாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் மாதிரி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆண்டு ஐரிஸ் கிளாம் ஒரே மேடையில் அதிக எண்ணிக்கையிலான பேஷன் மாடல்களை நிறுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.