இறைவன் விமர்சனம்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில்,
ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ்.வினோத் கிஷன், ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “இறைவன்”.

காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் ஜெயம் ரவியும், நரேனும் நெருங்கிய நண்பர்கள். நரேனின் தங்கை நயன்தாரா ஜெயம் ரவியை காதலிக்கிறார். சென்னையில் சில மாதங்களிலேயே 12; இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக விவரிக்க முடியாத அளவு சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றனர். சைக்கோ கொலையாளியான ராகுல் போஸை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது நரேன் கொலை செய்யப்படுகிறார்.

தனது நண்பனை காப்பாற்ற முடியாமல் போனதால் குற்ற உணர்ச்சிக்கு உட்படும் ஜெயம் ரவி போலீஸ் வேலையை விட்டுவிட்டு நரேன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் ராகுல் போஸினால் மேலும் சில பெண்கள் கொலை செய்யப்படுவதோடு, ஜெயம் ரவிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணையும் கடத்தி கொலை செய்கிறான். இதனால், மீண்டும் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஜெயம் ரவி ஈடுபடும் போது, ராகுல் போஸை தவிர மேலும் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். அந்தக் கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே இறைவன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் : ஹரி.கே.வேதாந்த்
படத்தொகுப்பாளர் : ஜெ.வி.மண்கண்ட பாலாஜி
கலை இயக்குநர் : ஜாக்கி
பிஆர்ஒ : டிஒன்