கோவில்பட்டி ரோட்டரி சங்கம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சர்வதேச வேட்டி தினவிழா கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டிதினம் 2014ம் ஆண்டு அப்போதைய கோஆப்டெக்ஸ் நிறுவன மேலான்மை இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் அறிவிப்பினை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகிறது. நாடார் நடுநிலைப்பள்ள pமாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்துஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பருத்தியில் வேட்டிஎனும் ஆடையை நெய்து பயன்படுத்திய தமிழர்களின் பெருமையையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் வாரம் ஒருநாள் வேட்டிஅணியும் பழக்கத்தை மேற்கொண்டு நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அனைத்து தரப்பு மக்களிடமும் வேட்டி அணியும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை உருவாக்குவேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக துவங்கி கடலைக்காரத்தெரு, பத்தி;ரகாளியம்மன் கோவில் தெருவழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ண தபோவன உறுப்பினர் ஆர்.நெல்லையப்பன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்க தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். சர்வதேச வேட்டி தின ஊர்வலத்தை திரைப்பட இணை இயக்குநர் ராஜசேகரன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூகஆர்வலர் முத்துமுருகன்,பத்திரகாளியம்மன் கோவில் செயலர் மாணிக்கம்,நாடார் உறவின் முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், ரோட்டரிசங்கதுணைதலைவர் ரவிமாணிக்கம்,செயலர் வெங்கடேஷ் ,பொருளாளர் நாராயணசாமி, நாடார் நடுநிலைப் பள்ளி பள்ளிக்குழு உறுப்பினர்கள் பொன்ராமலிங்கம், ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் வீராச்சாமி,மாரியப்பன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினர்.