அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம்.
இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய
“பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும் “ஐ ஃபார் இந்தியா” (I for India) அமைப்புகளின் முதன்மை ஆதரவுடன் நடத்தும் “அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020”. (International film & music festival 2020)

இருபத்தைந்துக்கும் மேற்பட்ட
உலகத்தமிழ் அமைப்புகள் கரங்களை
இணைத்து செயல்படும் ஓரு மாபெரும் கலைக்கொண்டாட்டம்.

உலகெங்கிலும் இருந்து தமிழ்க் குறும்படங்கள், தமிழ் இசைப்பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை படைப்புகளை அனுப்பிவைக்கலாம்.
உலகளவில் மறைந்திருக்கும் பல திறமைகளை வெளிச்சமிட்டு வெளியே கொண்டு வர, உலகத் தமிழ் அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் பெரும் முயற்சி. கலந்து கொள்ள கட்டணங்கள் ஏதுமின்றி, வணிக நோக்கங்கள் ஏதுமின்றி கலையார்வத்தையும், கலைஅனுபவத்தையும் மட்டுமே முன்னிறுத்தும் நிகழ்ச்சி என்று துபாய் பொன்மாலைப்பொழுதின் கணேசன் ராமமூர்த்தி மற்றும் டோக்கியோ தமிழ்ச்சங்கத் தலைவர் ஹரி ஆகியோர் தெரிவித்தார்.

இது குறித்த விரிவான தகவல்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை அன்று, முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்
பிரபலங்களின் வாழ்த்து மற்றும் அறிமுகவுரையுடன் சுவாரஸ்ய கலைநிகழ்வுக் காணொளியாக வெளிவரவிருக்கிறது என்பதை ஜூ ஸ்டூடியோஸ் -அரவிந்த் மற்றும், ஐ ஃபார் இந்தியா சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இக்காணொளியை, முத்திரை மற்றும், டூரிங் டாக்கீஸ் யூ ட்யூப் சேனல்,
பொன்மாலைப் பொழுது, டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கங்களின் முகநூல் (Facebook) ப்ரீமியர் நேரலையில் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு காணலாம்.

மனிதர்கள் வீடடங்கி,ஊரடங்கி… உலகே அடங்கி இருக்கும் இக்காலச் சூழலில், கலைகளால் கவலைகளை மறக்கச் செய்யும் ஒரு முயற்சி.
இணைய மேடையில் திறன்மிக்க கலைஞர்களை உலக நாடுகளின் வரைபட எல்லைகளைக்
கடந்து ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பு என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒற்றைக்குரலில் குறிப்பிடுவது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முன்னுரையாக ஒலிக்கிறது.
====