தமிழகத்தின் முன்னாள் முதல்வர் , தி மு க வின் தலைவர் , திரு மு கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாள் விழாவை , அக்கட்சியின் தொண்டர்கள் , தமிழகமெங்கும் கொண்டாடினர். கொரோனாவால் தமிழகமே தத்தளிக்கும் இவ்வேளையில் ,விமர்சையாக கொண்டாடுவதை தவிர்த்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு.D. துரைசாமி ,காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் , காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு நா கோபால்,ஆகியோரின் மேற்பார்வையில் தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி பண்ருட்டி தணிகாசலம் ,கிளை செயலாளர் கண்டிகை உமாபதி ஆகிய இருவரும் இனைந்து பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் கொடி ஏற்றினர்.
கிட்டத்தட்ட தி மு க வில் 40ஆண்டுகால அனுபவம் உள்ள பண்ருட்டி கண்டிகையின் கிளைசெயலாளர் ,திரு.வே. உமாபதி, அவர்கள் கொடியினை ஏற்றி வைத்து பேசும்பொழுது ,”காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நமது கட்சியின் கட்சியின் கோட்டையாக உள்ளதால் , கட்சியினரிடையே பெரும் எழுச்சி இருக்கிறது , அது மட்டுமில்லாமல் நமது தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆளுமையை கட்சியினர் மட்டுமல்ல; சாமானிய மக்களும் வெகுவாக பாராட்டுகின்றனர்.இந்நிலை நிச்சயம் தொடரும் , மேலும் வருங்காலங்களில் தங்கதளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியடைவதை கண்டே மக்களின் பேராதரவு தொடரும், அப்படியானால் என்றுமே ‘ இனி நம்ம கொடிதான் பறக்கும்! ‘”என்றவுடன் அங்கிருந்த தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இனி தனது கிளையில் ஊரக வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடக்கும் எனவும் அதற்கு தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த கொடிய காலகட்டத்தில் அனைவரும் முழு விழிப்புடன் இருக்கவும் எங்கு செல்லும் முன்பும் மாஸ்க் அணிந்தே செல்லவும் என வேண்டுகோள் விடுத்தார் நிறைவாக இம்முறை நமது தி மு க வின் ஆட்சி முந்தைய எல்லா முறையை விடவும் மிகச்சிறந்த ஆட்சியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை , அதனை அனைவரும் வரும்காலங்களில் பார்ப்போம் என்றார்.