திமுக சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கபடலாம் என தகவல்

திமுகாவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

நீட் தேர்வை எதிர்த்து நடைப் பெறும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மாணவி அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழகமே நீட் தேர்விற்கு எதிராக உள்ளது என்பதை மத்திய , மாநில அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கபடலாம் என்ற தகவல்கள் சொல்லபடுகிறது. அதிமுக, பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகள் அனைத்துக்கும் திமுக சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.