இன்பினிட்டி விமர்சனம்

மென்பனி புரொடக்ஷன்ஸ் வி.மணி கண்டன், யு.பிரபு,கே.அற்புதராஜன், டி. பாலபாஸ்கரன் ஆகியோர் தயாரிப்பில், சாய் கார்த்திக் இயக்கத்தில், நட்டி நடராஜன், வித்யா பிரதீப்,முனீஸ்காந்த், தா.முருகானந்தம், சார்லஸ் வினோத், வினோத் சாகர், நிகிதா, ஜீவா ரவி, மோனா பெட்ரீ, ஆதவன், சிந்துஜா, கிருஷ்ணராஜூ, பாலபாஸ்கரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இன்பினிட்டி.

ஒரே நாளில் சென்னையில் இரண்டு கொலைகள் நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார். இதனால், அந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ அதிகாரி நட்டி நட்ராஜன் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது, ஒரு பெண்ணின் கொலைக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பதோடு, இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? , கொலையாளி யார்?என்பதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இன்பினிட்டி படத்தோட மீதி கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : சரவணன் ஸ்ரீ

இசை : பாலசுப்பிரமணியன்.ஜி

எடிட்டர் : எஸ்.என்.ஃபாசில்

கலை : பிரன்மலை சரவணன்

சண்டை : ஸ்டன்னர் சாம்

தயாரிப்பு நிர்வாகி : உமாமகேஷ்வரா ராஜூ.டி

பிஆர்ஒ : நிகில் முருகன்