இந்திரா விமர்சனம் 3.5/5

ஜேஎஸ்எம் மூவி புரொடக்ஷன் & எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில், ஜாபர் சாதிக், இர்பான் மாலிக் தயாரிப்பில், சபரிஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி  சுனில், மெஹ்ரீன் பிர்சாதா,  அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார் ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இந்திரா.

வசந்த் ரவியும் மெஹ்ரினும் கணவன் மனைவியாக ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறார்கள். போலிஸ் அதிகாரியாக இருந்த வசந்த் ரவி ஒரு நாள் இரவில் குடித்துவிட்டு கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனால் ஒரு மனசோர்டனையே இருந்து வருகிறார் வசந்த் ரவி. வசந்த் ரவிக்கும் மெஹ்ரினுக்குமிடையே ஒரு வெறுப்பு இருந்து வருகிறது. 

பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் முடிந்தும் தன்னை பணியில் மீண்டும் சேர்க்கவில்லை என்று கோபத்திலும் விரத்தியிலும் குடித்துக் கொண்டே இருக்கிறார் வசந்த் ரவி. 

இப்படி குடிப்பதால் ஒரு கட்டத்தில் தன்னுடைய கண் பார்வையை இழந்து விடுகிறார் வசந்த் ரவி. அவருக்கு துணையாக மனைவி மெஹ்ரின் இருந்து வருகிறார்.

இப்படி இவர்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கையில், மறுபக்கம் சைக்கோ கில்லராக இருக்கும் சுனில் சிலரை தொடர்ச்சியாக கொலை செய்து விட்டு கையை மட்டும் வெட்டி அவற்றை பொதுவெளியில் வீசி வருகிறார்.

இதனை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் கல்யாண். இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரினும் இவ்வாறு கொலை செய்யப்படுகிறார். 

ஒரு கட்டத்தில் போலீஸிடம் மாட்டும் சுனில் எல்லா கொலையும் நான் தான் செய்தேன், ஆனால் மெஹ்ரினை நான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார்.

சுனில் அனைவரையும் கொலை செய்ய காரணம் என்ன? சுனிலுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? மெஹமெஹ்ரினை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதே இந்திரா படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : ஜேஎஸ்எம் திரைப்படத் தயாரிப்பு, எம்பரர் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள் : ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்

தமிழ்நாடு வெளியீடு : டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர் ரவீந்திரன்

எழுதி இயக்கியவர் : சபரிஷ் நந்தா

ஒளிப்பதிவு இயக்குனர் : பிரபு ராகவ்  

இசை : அஜ்மல் தஹ்சீன்

எடிட்டர் : பிரவீன் கே.எல்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : சூர்யா ராஜீவன்

ஸ்டண்ட் : விக்கி

நிர்வாகத் தயாரிப்பாளர் : வி.மதுசூதன்

விளம்பரங்கள் : வசுமதி (தி ரோட் மேப்)

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் (S2 மீடியா)