சென்னை, நவம்பர் 2, 2018: இந்தியாவின் முதலாவது 24X7 வீடுகளுக்கு பிரெஷ் சிக்கனை நேரடியாக சப்ளை செய்யும் ராயல் சிக்கன் நிறுவனம் தனது செயல்பாடுகளை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் நிறுவனத்தின் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். தமிழக அரசின் கால்நடை வளர்ச்சித்துறை அமைச்சர் திரு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் நிறுவனத்தின் இணையதள முகவரியை திறந்து வைத்தார். ராயல் சிக்கன் ஆர்டர் செய்வதற்கான மொபைல் விண்ணப்பத்தை செல்வி ஆண்ட்ரியா ஜெர்மையா திறந்து வைத்தார்.
இந்நிறுவனம் கடுமையான தரக் கட்டுப்பாடுகளை பின்பற்றி முதல் தரம் வாய்ந்த கோழி மற்றும் முட்டைகளை சப்ளை செய்கிறது. இவை அனைத்துமே புரதச் சத்து அதிகம் நிறைந்த தயாரிப்புகளையே தங்கள் வாடிக்கையாளருக்கு அவர்களது விருப்பத்துக்கேற்ப வழங்குகிறது. ராயல் சிக்கன் நிறுவனம் மிகவும் உயர் தரத்துடன் சுகாதாரமான முறையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கன் கிடைப்பதை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் ஹலால் மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ சான்று பெற்றவையாகும்.
ராயல் சிக்கன் நெடி இல்லாத, சுகாதாரமான நவீன இறைச்சியாகும். இது அனைத்து சில்லரை வர்த்தக நிலையங்களிலும் கட்டுபடியாகும் விலையில் கிடைக்கிறது. மிகச் சிறப்பான பின்புல செயல்பாடுகள் காரணமாக சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கிடைத்தாலும் இவை ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் மற்றும் ஆன்டி பயாடிக் விளைவுகள் இல்லாமல் கிடைக்கிறது. ராயல் சிக்கன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது. அத்துடன் தனது விற்பனையகத்தில் மிகச் சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. ராயல் சிக்கன் நிறுவனம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சிக்கன் சாப்பிட விரும்புவோருக்கு நேரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறது.
புதிய விற்பனையகம் குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டாக்டர் ரவீரந்திரன் சிக்கன் கூறியது: வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான புரதம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நிறுவனம் கடுமையான தரக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறது. இதை அடிப்படை விஷயமாக ஒவ்வொரு பிரிவிலும் பின்பற்றப்படுகிறது. ராயல் சிக்கன் நிறுவனம் தனது தயாரிப்புகள் பாதுகாப்பாக, சுகாதாரத்தோடு, உயர் தரத்தில் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இவை அனைத்தும் கோழிப் பண்ணைகளுடன் உள்ள தொழில் ரீதியான நட்பு மூலம் கோழிகளுக்கு அளிக்கப்படும் உணவுகளும் கண்காணிக்கப்படுகின்றன. கோழி வளர்ப்பு முதல் இறைச்சியாக வாடிக்கையாளரை சென்றடையும் வரை அனைத்துமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன.
கோழிகளைக் கொள்முதல் செய்வதில் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ராயல் சிக்கன் பின்பற்றுகிறது. பதப்படுத்தல், விநியோகித்தல், சில்லரை வர்த்தகம் ஆகிய அனைத்து பிரிவிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ராயல் சிக்கன் நிறுவனம் மேலும் 5 புதிய கிளைகளை டிசம்பர் மாதத்திற்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. விரிவாக்க நடவடிக்கையாக அடுத்த நிதி ஆண்டிற்குள் பெங்களூருவில் 50 விற்பனையகம் தொடங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக டாக்டர் ரவீந்திரன் குறிப்பிட்டார்.
ராயல் சிக்கன் பற்றி
ராயல் சிக்கன் நிறுவனத்தின் நோக்கமே இந்தியாவின் முதலாவது நவீன பிரெஷ் சிக்கன் சில்லரை கடைகளிலும் புரதச் சத்து நிறைந்ததாக கிடைக்கச் செய்வதுதான். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான சேவையோடு தரமான பொருள்களை அளிப்பதன் மூலம் வர்த்தகம் பெருகும் என்பதில் இந்நிறுவனத்துக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நிலவும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு ராயல் சிக்கன் நிறுவனம் உங்கள் வீட்டிற்கே சிக்கன் கிடைக்க வழி செய்துள்ளது.
தற்போது மக்கள் பெரும்பாலும் புரதச் சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். மாறிவரும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கேற்ப வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் முறையானது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி ராயல் சிக்கன் நிறுவனம் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இறங்கி இணையதளம் மற்றும் மொபைல் செயலி (ஆப்) மூலம் ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் வசதியை உருவாக்கி உள்ளது.
இந்நிறுவனமானது இரண்டு துடிப்பு மிகுந்த விவசாயப் பின்னணி கொண்ட பொது நோக்கம் ஒருமித்த அதாவது தரமான புரதச்சத்தை சுகாதாரமாக அளிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இதை ஒரு தொழில் திட்டமாகக் கருதாமல் இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.