இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிஎல்) விமர்சனம்

கருணாநிதி இயக்கத்தில், கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, நரேன், குஷிதா, திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஐபிஎல்.

கிஷோர் வாடகை கார் ஓட்டி தன்னுடைய குடும்பத்தை பிரச்சனை இல்லாமல் பார்த்து வருகிறார். வேலை செய்யும் இடத்தில் வேறு ஒருவருக்கு உதவி செய்ய அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டு வேலையிலிருந்து வெளியேறுகிறார்.

அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கி அதன் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

டி டி எப் வாசன் கிஷோரின் தங்கையை காதலித்து வருகிறார். டி டி எப் வாசன் மீது கிஷோருக்கு நல்ல அபிப்ராயம் இல்லாமல் போகிறது.

நன்றாக போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் டூவீலரில் வரும் ஒருவர் கிஷோர் மீது இடித்து விட கிஷோரின் காலில் அடிபட்டு விடுகிறது.

இதனால் கிஷோர் வண்டி ஒட்ட முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். அந்த சமயத்தில், போலீஸ்ஆன போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை ஒருவன் வீடியோ எடுத்து விட்டான் என்று அவனை கைது செய்து சிறையில் அடைத்து அடித்து கொன்று விடுகிறார் போஸ் வெங்கட்.

அந்த வழக்கில் கொலை பழி செலுத்தி கிஷோரை கைது செய்கின்றனர். கிஷோர் மீது பழியை போட்டு அவனை குற்றவாளி ஆக்க வேண்டும் என்று மேல் இடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

போலீசார் கிஷோரை சித்திரவதைக்கு உள்ளாக்கி உண்மையை ஒப்புக்கொண்டு கையெழுத்திட சொல்கிறார்கள்.

டிடிஎஃப் வாசன் கிஷோரிடம் நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுவேன் வெளியில் கொண்டு வருகிறேன் என்று கூறுகிறார். 

கிஷோர் மீது சுமத்தப்பட்ட பழியை டிடிஎப் ஹாசன் நீக்கி அவரை வெளியில் கொண்டு வந்தாரா? இல்லையா? கிஷோர் மீது எதற்காக கொலை பழியை போட முயற்சி செய்கின்றனர் என்பதே ஐபிஎல் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : கருணாநிதி

தயாரிப்பாளர் : ஜி.ஆர். மதன் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி

ஒளிப்பதிவாளர் : எஸ்.பிச்சுமணி

தயாரிப்பு நிர்வாகி : ராஜா சுப்ரமணி

எடிட்டர் : பிரகாஷ் மப்பு

சண்டை : தினேஷ் சுப்பராயன் 

ஆடை வடிவமைப்பாளர் : ஆர்.முருகானந்தன் 

கலை இயக்குனர் : ‘வெங்கல்’ ரவி

நடன இயக்குனர் : ராஜேஷ் கிறிஸ்டி, நோபல் ஜெசிகே

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்