இந்தியன் 2 விமர்சனம்

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, ஜெகன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இந்தியன் 2.

சித்தார்த் தன்னுடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து யூடியூப் ஒன்று நடத்தி வருகிறார். அந்த யூடியுப் சேனல் மூலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் அதனை செய்ய முடியாமல் போய்விடுகிறது இதனை சரி செய்வதற்காக இந்தியாவில் இருந்து போன இந்தியன் தாத்தாவை திரும்பி வர வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

அதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பல விஷயங்களை ஹேஷ்டேக் செய்கிறார்கள். அவர்களின் முயற்சி தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தாவின் கவனத்திற்கு செல்கிறது அதனால் அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.

இந்தியன் 1னில் தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கு மட்டுமே உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா இந்தியன் 2வில் இந்தியா முழுவதிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக யுத்தத்தை தொடங்குகிறார்.

ஆனால் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கவும் செய்கிறார். மறுபுறம் அவரை தேடிக் கொண்டிருக்கும் சிபிஐ அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள்.

இந்தியாவிற்கு வந்து ஊழலை அகற்ற வேண்டும் என்று நினைத்த சித்தார்த்தே ஏன் இந்தியன் தாத்தாவை வெறுக்கிறார்? அதிகாரிகளுடன் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா? இல்லையா? என்பதே இந்தியன் 2 படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்
இயக்கம் : சங்கர்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர் : ரவிவர்மன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : டி.முத்துராஜ்
எடிட்டர் : ஸ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு : சதீஷ்(AIM)