துபாயில் இந்தியன் 2 பேனரை விண்ணில் பறக்கவிட்டு கெத்து காட்டிய இயக்குனர் சங்கர்

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2.

இந்தப் படம் ஜூலை 12 உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தபடத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்திற்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

தற்பொழுது துபாயில் விண்ணில் பாராசூட்டில் இரண்டு சாகச வீரர்கள் இந்தியன் 2 பேனரை பறக்கவிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்லாவற்றிலும் பிரம்மாண்டம் காட்டும் இயக்குனர் சங்கர் விளம்பரத்திலும் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளார்.