கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியி;ல் திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற வைர விழா, மற்றும் 94வது பிறந்த நாள் விழா இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாமினை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.வுமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகன், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாறன், சேதுரத்தினம், ஏஞ்சலா உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் எம்.எல்.ஏ. கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழக அமைச்சர்கள் யாரும் வாய் திறந்து பேசியது இல்லை, தற்போது அவரது மறைவிற்கு பின், அவரது மரணம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறனர். இவர்களை பார்த்து தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்தியாவே சிரிக்கிறது என்றார்.