இணையத்தளம் – சினிமா விமர்சனம்

படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு இணையதளத்தில் நேரலையில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிரை இழந்து வரும் டெல்லி கணேஷின் உயிர் எவ்வாறு பிரிகிறது என்றால், இணையதளத்தில் அந்த வீடியோவை நேரலையில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூட கூட அவர் மரண கட்டத்தை நெருங்குகிறார். 

இவ்வாறாக அந்த வீடியோவின் வெயிட் அதிகரிக்க, இதுகுறித்த தகவல் அறியும் மாநகர போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடுகிறார். இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவுக்கு (Cyber Crime) உத்தரவு செல்கிறது. அந்த பிரிவின் பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போதே, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார். 

இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவிற்கான இணைய பார்வையாளர்களும் அதிகரிக்க பத்திரிக்கையாளரும் உயிரிழக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து, ஈரோடு மகேஷ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். 

இருந்தாலும் மீண்டும் பணிக்கு திரும்பும் உத்வேகத்தில், இந்த குற்றம் குறித்து கண்டறிய, மகேஷ் தன்னால் இயன்ற உதவியை செய்து வர அடுத்த வீடியோவில் கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவெக்றால், இதுவரை அந்த குற்றம் குறித்து கண்டறிய உதவிய ஈரோடு மகேஷ் மரண மேடையில் நிற்க, இந்த கொலைகளை செய்வது யார் என்பது தெரியாமல் கணேஷ் குழம்பி நிற்கிறார். 

மகேஷை காப்பாற்றுவதற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஒருபுறம் போராட, அவரது முயற்சி பலிக்காமல், ஈரோடு மகேஷ்-ம் இறந்துவிடுகிறார். இந்த சம்பத்திற்கு காரணம் யார்? அடுத்ததாக மரண மேடைக்கு செல்லும் ஸ்வேதா மேனனை கணேஷ் வெங்கட்ராம் மீட்டாரா? அதன் பின்னணியில் நடந்தது என்ன? ஏன் வரிசையாக இணைய கொலைகளை செய்கிறார்? என்பது படத்தின் மீதிக் கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்