என்னோட தனிப்பட்ட வாழ்க்கை பாதித்தாலும் கவலையில்லை – விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர், என வலம் வரும் நடிகர் விஷாலுக்கு,  40 வயதை நெருங்கி விட்ட போதிலும் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு அந்த சங்கத்தில் தான் தன் திருமணம் நடக்கும் என உறுதியாக கூறியுள்ளார். 2018 ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்றும் அறிவித்துள்ளார். விஷால் இவ்வாறு கூறிய போதிலும் வீட்டில் பெண் பார்க்க தொடங்கிவிட்டார்களாம்.

இது தொடர்பாக விஷால் அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது, எனக்கு பெண் பார்த்து பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சோர்ந்துவிட்டார்கள். ஏதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு என்னை அவர்கள் அழைத்தாலே அங்கு எனக்கு பார்த்துள்ள பெண் வந்திருக்கிறாள் என்று என தெரிந்து விடும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கிற வரையில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நானே சொல்லி விட்டேன். என்னுடைய இந்த முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம். இதனால் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.