6 மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால், பணி நீக்கம்

 

கர்நாடக அரசின் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம், பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், கன்னட மொழி தெரியாத அனைத்து வங்கி ஊழியர்களும் 6 மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. 6 மாத கால அவகசாத்திற்கு பிறகும் கன்னட மொழி தெரியாத வங்கி ஊழியர்கள் அவர்களுடைய வேலைவாய்ப்பு விதிகளின் படி, தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் உள்ளூர் மொழியான கன்னடம் தெரியாமல், வங்கி ஊழியர்கள் எப்படி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் கன்னட மொழி மேம்பாட்டுக் ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.