தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் பாஜக-வினரிடையே கண்டனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து பல பேருடைய ஆதரவு மெர்சல் படத்திற்கு கிடைத்து வருகின்றது. இருந்தாலும் எதிர்ப்புககளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், உடல் பரிசோதனையில் முறைகேடு நடப்பதாக ஒட்டுமொத்தமாக எப்படி குறை கூற முடியும்? உரிய புள்ளி விவரங்கள் இல்லாமல் மெர்சல் படத்தில் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை தொடர்பான கருத்துகள் தவறான எண்ணங்களை உருவாக்கிவிடும். அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையை நடத்துவது தவறுதான், அவர்களை அரசு கண்காணிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.