ஆண்களின் முகப்பருவுக்கு டிப்ஸ்

அதிகம் வெளியே சுற்றுவதாலும், முறையான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காததாலும், முகப்பரு தோன்றும். இயற்கை வழிகள் மூலம் முகப்பருவிற்கு நல்ல பலனை அடையலாம்.

தேன்

தேனை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 3 முறை செய்தால், பரு பிரச்சனையே வராது.

டூத் பேஸ்ட்

இது அனைவரது வீட்டிலும் இருக்கும் ஓர் பொதுவான அத்தியாவசிய பொருள். இந்த டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து, 1 மணிநேரம் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

ஆவி பிடிப்பது

சுடுநீரால் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அழுக்குகளின் தேக்கத்தால் ஏற்படும் பருக்கள் வருவதும் தடுக்கப்படும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

புதினா

புதினாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினாலும், அதில் உள்ள குளிர்ச்சித் தன்மையாலும், சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். அதற்கு புதினாவை அரைத்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஐஸ் பேக்

ஐஸ் கட்டி, சருமத்தில் இருக்கும் அழுக்குளை வெளியேற்றி, முகப்பரு பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முகப்பரு வருவது தடுக்கப்படும்.

 

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் போய்விடும்.

பப்பாளி

பப்பாளி உடலினுள் உள்ள உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு பாதுகாப்பை வழங்கி, பிம்பிள் பிரச்சனையைத் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் பொடியுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து, கழுவ நல்ல மாற்றத்தைக் காணலாம்.