பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி மற்றும் பாலாஜி மாதவன் தயாரிப்பில், பாலாஜி மாதவன் இயக்கத்தில், சிபி, பவ்யா த்ரிகா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு, யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இடி மின்னல் காதல்.
சிபியும் பவ்யா த்ரிகாவும் காதலிக்கிறார்கள். வெளிநாடு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் சிபி. ஒரு நாள் இரவு நேரத்தில் இருவரும் காரில் பேசிக் கொண்டும் ஜாலியாக வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது இவர்களது காரில் ஒருவர் அடிபட்டு இறந்து விடுகிறார், அதனை போலீசிடம் மறைப்பதுடன், மட்டுமில்லாமல் சிபி வெளிநாடு செல்வதற்காக பவ்யா அனைத்து உதவிகளையும் செய்கிறார்.
இதற்கிடையே விபத்தில் இறந்தவரின் மகன் சிறுவன் ஆதித்யா அதை தாங்கிகொள்ள முடியாமல் அழுது கொண்டும் தவித்துக் கொண்டும் இருக்கிறான். ஆதித்யாவின் நிலை பார்க்கும் பாலியல் தொழிலாளி யாஸ்மின் பொன்னப்பா அவனுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறார்.
ஆதித்யா அப்பா வாங்கிய கடனுக்காக, கடன் கொடுத்த தாதா வின்செண்ட் நகுல், சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். இந்த சூழ்நிலையில், அவரிடமிருந்து சிறுவன் ஆதித்யாவை சிபி காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
அவர்களிடமிருந்து ஆதித்யாவை சிபி காப்பாற்றி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தனது அப்பாவின் சாவுக்கு காரணம் சிபி என்பதை தெரிந்து கொள்ளும் ஆதித்யா, சிபியை பழிவாங்க நினைக்கிறான்.
ஆதித்யாவின் அப்பாவின் இறப்பிற்கு சிபிதான் காரணமா? இல்லை வேறு காரணம் ஏதாவது உண்டா? ஆதித்யா சிபியை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இடி மின்னல் காதல் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஜெயச்சந்தர் பின்னம்நேனி
இயக்கம் : பாலாஜி மாதவன்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஜெயசந்தர் பின்னம்நேனி
மக்கள் தொடர்பு : டைமன் பாபு