கொரொனா பரவல் முடிந்த கையோடு தமிழக திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது “இது என் காதல் புத்தகம்”
முன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார், அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.
இப்படி பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள ” இது என் காதல் புத்தகம் ” படத்தை
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.
பிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார.
இவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
எம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய ” என்னாத்தா ” என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது.
இந்த படத்தை தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்க்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட் செய்துள்ளார்.
கொரொனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது ” இது என் காதல் புத்தகம் “