தஞ்சாவூரில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் அதிகார பூர்வ லெட்டர் பேடில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது தவறான செயலாகும். சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. அதிமுக பெயரையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியமித்த திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் பொருளாளராக செயல்படும் போது நான் ஏன் துணை பொதுச் செயலாளராக செயல்பட கூடாது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதல்வர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. என்னை தடை போடும் முழு அதிகாரம் பொது செயலாளருக்கு மட்டுமே உண்டு அவருடைய வார்த்தைக்கு மட்டும் தான் கட்டுப்படுவேனே தவிர நேற்று முனைந்த காளான்களுக்கு நான் கட்டுபட்டு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இன்று இவர்கள் போட்டுள்ள தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால் அமைச்சர்கள் பதவி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவி நிச்சயம் பறிபோகும். கட்சி ஆட்சியை பற்றி கொஞ்சமும் இவர்களுக்கு கவலை இல்லை கிடைத்ததை சுருட்டும் வரை பதவியில் இருக்க விரும்புகிறார்கள். மடியில் கனம்உள்ளவர்கள் பயந்து செயல்படுகிறார்கள். நல்லவர்கள் யார் என்பது அதிமுக தொடர்களுக்கு தெரியும் என்று கூறினார்.