லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் “இப்படை வெல்லும்” படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று பிரசாத் திரையரங்கில் நடந்தது. அதில் தயாரிப்பாளர் ராஜுமகாலிங்கம், உதயநிதி ஸ்டாலின், சூரி, டேனியல்பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், ராதிகாசரத்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.
உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, ‘இப்படை வெல்லும்’ படத்தின் கதையை இயக்குனர் கவுரவ் சொல்லும்போது, இரண்டு நாட்கள் நடக்கின்ற ஒரு சம்பவத்தை மையமாக வைத்து கதையை சொன்னார். அவர் கதை சொல்லும்போது மிகவும் திரில்லிங்காக இருந்த்து. கதையை கேட்டவுடன் இந்தப் பட்த்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்று யோசித்தேன். ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருந்த்தால் ‘இப்படை வெல்லும்’ பட்த்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்த்து. படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் சிரமப்பட்டேன்.
டேனியல்பாலாஜியுடன் நடிக்கும்போதும், ஆர்.கே.சுரேஷுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது உண்மையாகவே அடி வாங்கினேன். எனக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இது எனக்கு ஒரு பெரிய அனுபவமாக இருந்த்து. இதில் கதாநாயகியாக நடிக்கும் ம்ஞ்சுமாமோகன் சிறப்பாக தன் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடனம் ஆடி இருக்கிறார். எனக்கு அம்மாவாக ராதிகா மேடம் நடித்து இருக்கிறார்கள். முதன் முதலாக என்னுடன் நடித்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்…என்றார்.
டேனியல்பாலாஜி பேசியபோது, “தற்போது எனக்கு ரெகுலர் வில்லன் வேடத்தில் நடிப்பதில் ஆர்வமில்லை. டைரக்டர் என்னிடம் கதையை சொல்லும்போது ஸ்டைலிஷ் வில்லன் வேடமாக இருந்த்து. இந்தப் படம் ஒரு வேகமான கதையம்சம் உள்ள படம். அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இப்பட்த்தில் எனக்கு அதிகமாக வசனம் இல்லை. முக பாவத்திலேயே என் நடிப்பை காட்டி இருக்கிறேன். இதில் நடிக்கும்போது உதயநிதி ஸ்டாலின், சூரி, மஞ்சுமாமோகன் ஆகியோருடன் படப்பிடிப்பில் மிக ஜாலியாக இருந்தது” என்றார்.
ராதிகாசரத்குமார் பேசியபோது, ‘நான் அம்பத்தூரில் ’வாணி ராணி’ படப்பிடிப்பில் இருந்தேன். அங்கிருந்து வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. சென்னையில் மழைக் காலங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு இடையூறுகள் என்பது அனைவருக்கும் தெரியும். போக்குவரத்து நெரிசல் காரணமாக லேட்டாகி விட்ட்து.
இந்தப் படத்தில் நான் உதயநிதிக்கு அம்மாவாக நடித்து இருக்கிறேன். அவர் நடித்த ஓரிரு படங்களை பார்த்து இருக்கிறேன். மற்ற படங்களில் நடித்த்தை விட இந்த பட்த்தில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் டைரக்டர் எனக்கு ஒரு பஸ் டிரைவர் கேரக்டரில் நடிக்க வைத்து இருக்கிறார். திருவண்ணாமலை பஸ் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் பஸ்ஸை ஓட்ட வைத்து விட்டார். எனக்காகவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்த டைரக்டருக்கு இந்த சமயத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.