ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என பெட்ரோலியத்துறை விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் மட்டும் தொடங்கிய போராட்டம் இன்று மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது. நாளுக்கு நாள் போராட்டத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவால் நிச்சயம் விடிவு கிடைக்கும் என்று நெடுவாசல் கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில், நெடுவாசலில் நடைபெறவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என பெட்ரோலியத்துறை  விளக்கமளித்துள்ளது.

இதுபற்றி பெட்ரோலியத்துறை அளித்துள்ள விளக்கத்தில் “நெடுவாசலில் நடைபெறவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை. இதன்மூலம் தமிழக அரசுக்கு 40 கோடி ரூபாய் ராயல்டி கிடைக்கும். 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே தோண்டப்பட்ட எண்ணெய் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.