“ஹவுஸ் மேட்ஸ்” விமர்சனம்

டி ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, அர்ஷா சாந்தினி பைஜு, அப்துல் லி, தீனா, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்.

தர்ஷன் அப்பா அம்மா இல்லாமல் இருக்கிறார் அவருக்கு நண்பனாக தீனா. தர்ஷனும் அர்ஷா சாந்தினி பைஜுவும் காதலிக்கிறார்கள்.

அவரை திருமணம் செய்து கொள்ள சொந்தமாக வீடு ஒன்றை வாங்குகிறார் தர்ஷன். இருப்பினும் அர்ஷாவின் அப்பா திருமணத்திற்கு சமாதிக்காததால் இருவரும் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டு அவர்கள் வாங்கிய புது வீட்டில் குடியேறுகிறார்கள். 

அந்த வீட்டில் சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் அதே வீட்டில் காளி வெங்கட்டும் அவருடைய மனைவி வினோதினியும் அவர்களுடைய ஐந்து வயது ஹென்ரிக் மகனும் வாழ்ந்து வருகிறார்கள். 

தர்ஷன் அர்ஷா தம்பதிக்கு காளி வெங்கட் குடும்பம் இருப்பது தெரியாது. காளி வெங்கட் குடும்பத்திற்கு தர்ஷன் ஹர்ஷா இருப்பது தெரியாது.

இதனால் தர்ஷன் வீட்டில் எது செய்தாலும், காளி வெங்கட் வீட்டிலும் அதே நடக்கும் இதனால் அதனை ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். 

அதனால் சாமியாரை கூட்டி வந்து பூஜை செய்கிறார்கள் சாமியாரோ இந்த வீட்டில் எந்தவித துஷ்ட சக்திகளும் கிடையாது என்று சொல்லி விடுகிறார். 

ஒரு கட்டத்தில் இது எந்த அமானுஷ்யமும் இல்லை அறிவியல் என்பதை இரண்டு குடும்பங்களும் புரிந்து கொள்கிறார்கள். 

இருப்பினும் அவர்களை சுற்றி பலவிதமான அதிர்ச்சியான சம்பவங்களும் ஆச்சரியமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 

அதனால் இரண்டு குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது அந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்தார்கள்? 

இரு குடும்பமும் அதே வீட்டில் வாழ்ந்தார்களா? இல்லையா? இரு குடும்பமும் ஒரே வீட்டில் இருந்ததற்கான காரணம் என்ன?  போன்ற கேள்விகளுக்கான விடையே “ஹவுஸ் மேட்ஸ்” படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஹவுஸ் மேட்ஸ் படம் சில இடங்களில் புரியவில்லை என்றாலும் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ரேட்டிங் ⭐⭐⭐