கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை அறிமுகத்தின் மூலம் தமிழ்நாட்டில் அதன் செயல் பரப்பை ஜியோ விரிவாக்குகிறது.
– ‘ஜியோ வெல்கம் ஆஃபர்’ பயனாளிகளுக்கு 1 Gbps+ வேகம் வரை வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும்
மும்பை: 11 ஜனவரி 2023: தமிழ்நாட்டில் ட்ரூ 5ஜி சேவைகள் வழங்கப்படும் செயற்பரப்பை ஜியோ விரிவாக்குகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய தமிழ்நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. T. மனோ தங்கராஜ் ஜியோ ட்ரூ 5ஜி சேவை அறிமுகத்தை இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமை செயலர் டாக்டர். நீரஜ் மிட்டல், ஐஏஎஸ் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தார்.
5ஜி சேவைகளின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பல; சுகாதார பராமரிப்புத் துறையும் இதனால் பயனடையும். ஜியோ கம்யூனிட்டி கிளினிக் மெடிக்கல் கிட் மற்றும் புரட்சிகரமான ஜியோ கிளாஸ் என்ற பெயரிலான AR – VR சாதனம் ஆகியவற்றின் வழியாக சுகாதார சிகிச்சைப் பிரிவில் 5ஜியால் கிடைக்கக்கூடிய சிறப்பான ஆதாரங்களை ஜியோ செயல்முறை விளக்கத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை 5ஜி சேவையின் பலன்கள் கொண்டு வரும்.
இந்த அறிமுக நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. T. மனோ தங்கராஜ் உரையாற்றுகையில் கூறியதாவது: “தமிழ்நாட்டில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்டகால அடிப்படையில் 5ஜி சேவைகள் தமிழ்நாடு மாநில மக்களுக்கு நேர்மறையான மாற்றங்களின் மூலம் பெரும் ஆதாயங்களை வழங்கும்.
ஸ்டார்ட்அப் சூழலமைப்பு மீது தமிழ்நாடு அரசு சிறப்பு கூர்நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இம்மாநிலத்தில் 5ஜி சேவைகள் தொடங்கப்படுவது, IoT, பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மீது பணியாற்றி வருகின்ற இம்மாநிலத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது பெரிய உத்வேகத்தையும், உந்துதலையும் நிச்சயம் தரும்.”
இந்நிகழ்ச்சியின்போது பேசிய ஜியோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “தமிழ்நாட்டில் இன்னும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை விரிவாக்கம் செய்வதில் நாங்கள் அளவற்ற உற்சாகம் கொண்டிருக்கிறோம். மிக விரைவிலேயே ஜியோ ட்ரூ 5ஜி – ன் வலையமைப்பு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயல்படும். 2023 டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமும், நகரமும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளைப் பெற்று பயன்படுத்துகின்ற நிலையில் இருக்கும்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு வலையமைப்பை மட்டும் தமிழ்நாடு பெறுவதில்லை. மின் – ஆளுகை, கல்வி, சுகாதார பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், சிறு நடுத்தர நிறுவனங்களது பிசினஸ் ஆகிய பிரிவுகளிலும், புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இது திறந்துவிடும். நிகழ்நேர அடிப்படையில் அரசும், அதன் குடிமக்களும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதை ஜியோ ட்ரூ 5ஜி ஏதுவாக்கும்; அரசின் சிறப்பான திட்டங்கள் அனைத்தும் இறுதியில் அத்திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளை விரைவாக சென்றடைவதற்கு பெரிதும் உதவும்.
தமிழ்நாட்டில் 5ஜி வலையமைப்பை நிறுவுவதற்காக ரூ.40,000 கோடிக்கும் அதிகமான தொகையை ஜியோ முதலீடு செய்திருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 இலட்சம் நபர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது. இம்மாநிலத்தின் மீது ரிலையன்ஸ் ஜியோ கொண்டிருக்கும் பொறுப்புறுதியையும், பிணைப்பையும் இது நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் அற்புதமான ஆற்றலும் மற்றும் அதன் மிகப்பிரமாதமான ஆதாயப் பலன்களும் ஒவ்வொரு நபருக்கும் இதனால் கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் அனைத்து நபர்களுக்கும் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய ஜியோ பொறியியலாளர்கள் ஓய்வின்றி, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டை டிஜிட்டல்மய பொருளாதாரமாக ஆக்குவதற்கும் மற்றும் இம்மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இன்னும் வேகமாக எடுத்துச் செல்வதற்கும் தங்களது மேலான ஆதரவை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.
இன்றுமுதல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் ஜியோ பயனாளிகள் கூடுதல் கட்டணமின்றி 1 Gbps+ வேகம் வரை வரம்பற்ற தரவினை அனுபவிப்பதற்கு ஜியோ வெல்கம் ஆஃபரை பயன்படுத்த அழைக்கப்படுவார்கள்.
மூன்று மடங்கு ஆதாயதை ஜியோ ட்ரூ 5ஜி கொண்டிருப்பதால், இந்தியாவில் ஒரே ட்ரூ 5 ஜி வலையமைப்பாக இதனை ஆக்கியிருக்கிறது:
1. 4ஜி வலையமைப்பு மீது பூஜ்ய சார்ந்திருப்பு நிலை என்பதோடு, மிக நவீன 5ஜி வலையமைப்பைக் கொண்டு தனித்து நிற்கும் 5ஜி கட்டமைப்பு
2. 700 MHz, 3500 MHz, மற்றும் 26 GHz பேண்டுகளில் 5ஜி ஸ்பெக்ட்ரம் – ன் மிகப்பெரிய மற்றும் சிறந்த கலவை
3. கேரியர் அக்ரீகேஷன் என அழைக்கப்படும் ஒரு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த 5ஜி ஃப்ரீக்வென்சிகளை ஒற்றை வலுவுள்ள டேட்டா ஐவே ஆக நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் கேரியர் அக்ரிகேஷன்.
ரிலையன்ஸ் ஜியோஇன்ஃபோகாம் லிமிடெட் குறித்து :
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட் – ன் ஒரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (ஜியோ) நிறுவனமானது, அதிநவீன 4ஜி எல்டிஇ தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு உலகத்தரம் வாய்ந்த அனைத்து – IP தரவு கொண்ட உறுதியான எதிர்கால உத்தரவாத வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இது, தரைக்கு மேலே உறுதுணையான வாய்ஸ் ஓவர் எல்டிஇ தொழில்நுட்பத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வலையமைப்பாகும். தொழில்நுட்பம் 5ஜி, 6ஜி என, அதையும் கடந்து முன்னேறும்போது அதிக தரவுக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய எதிர்கால தொழில்நுட்பத்தேவைக்கு எளிதில் தரம் உயர்த்த முடியும்.
ஜியோவானது, 1.3 பில்லியன் இந்தியர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்கை இயல்விக்கச் செய்வதற்கும் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் தலைமைத்துவ பொறுப்பில் இந்தியாவை நிலைநிறுத்துவதற்கும் இந்திய டிஜிட்டல் சேவைகள் துறையில் மாறுநிலை மாற்றங்களைக் கொண்டுவரும். அனைவரும் ஜியோ டிஜிட்டல் லைஃப் – ஐ வாழ்வதற்கு வலையமைப்பு, சாதனங்கள், செயலிகள் மற்றும் உள்ளடக்கம் மற்றும் சேவை அனுபவம் ஆகியவை உள்ளடங்கிய ஒரு உகந்த சூழலமைப்பை இது உருவாக்கியுள்ளது.