பிரைட் என்டர்டைன்மென்ட் டைம்ஸ் நரசிம்மன் பக்கிரிசாமி தயாரிப்பில், நரசிம்மன் பக்கிரிசாமி இயக்கத்தில், நரசிம்மன் பக்கிரிசாமி, சுமிரா மற்றும் சிலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹெச்.எம்.எம்’ (HMM).
நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி செயற்கைகோள்களை கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான திட்டத்தை தனது நண்பருடன் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்.
அங்கே தனது காதலி சுமிராவுடன் மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே தனது வேலை விசயமாக நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில், அவரது குடியிருப்புக்குள் நுழையும் முகமூடி அணிந்த மர்ம மனிதன், சுமிராவின் தோழியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.
முகமூடி அணிந்த மனிதரிடம் இருந்து தப்பிக்க போராடும் சுமிராவின் போராட்டம் வெற்றி பெற்றதா? அந்த முகமூடி கொலைகாரன் யார்? எதற்காக அவர் சுமிராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்? வெளியே சென்ற நரசிம்மன் பக்கிரிசாமி என்ன ஆனார்? என்பதே ஹெச்.எம்.எம்’ (HMM) படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் : நரசிம்மன் பக்கிரி சாமி
ஒளிப்பதிவு : கிரண்
பின்னணி இசை : புரூஷ்
படத்தொகுப்பு : துரைராஜ்
சண்டை பயிற்சி : “ஸ்டண்ட்”-சுரேஷ்
மக்கள் தொடர்பு : வெங்கட்
இணை இயக்கம் : துரைராஜ், சிவக்குமார்