நானி தயாரிப்பில், சைலேஷ் கோலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ், சமுத்திரக்கனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹிட் 3”.
எக்ஸ் மிலிட்டரி மேன் ஆக இருந்த சமுத்திரக்கனியின் மகன் நானி ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். எப்பொழுதும் ஒரு கோபம் முகத்துடனும் நேர்மையாகவும் இருந்து வருகிறார்.
நானி இரண்டு நபர்களை அடுத்தடுத்து தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்து அதை வீடியோவாக எடுத்து ஒரு பிரைவேட் இணைத்தளத்தில் பதிவிடுகிறார்.
இரண்டாவது கொலை செய்யும் போது தனக்கு கீழ் பணி புரியும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொள்ளும் நானி அவரிடம் எதற்காக கொலை செய்கிறேன் சொல்ல ஆரம்பிக்கிறார்.
காஷ்மீரில் நானி காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் பொழுது மர்மமான முறையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அதனை நானி விசாரிக்கும் போது தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொலை செய்து கழுத்தை அறுத்து உடம்பில் உள்ள உறுப்புகளை திருடி அதனை வீடியோவாக எடுத்து ஒரு தடை செய்யப்பட்ட இணையத்தில் வெளியிடுகின்றனர். இந்த மாதிரி நாட்டில் பல இடங்களில் இது நடைபெறுகிறது.
இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நானும் இவ்வாறு கொலை செய்து வீடியோவை பதிவிட்டு அந்த கும்பலில் சேர்ந்து அவர்களை கொலை செய்ய வேண்டும் அதற்காகத்தான் என்று அந்த பெண் போலீஸ்டம் கூறுகிறார்.
கடைசியில் நானி அந்த கும்பலையும் அதன் அட்மினையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? எதற்காக அந்த கொலைகள் நடத்தப்பட்டது என்பதையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ஹிட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : நானி
இயக்கம் : சைலேஷ் கோலானு
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்