இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தனது ஆர் கே செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே கார்த்திகேயன் இவர்களின் இயக்கத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் “ஹிட் லிஸ்ட்”
நாயகன் விஜய் கனிஷ்கா, அம்மா சித்தாரா மற்றும் தங்கை அபி நக்ஷத்ராவோடு வாழ்ந்து வருகிறார்.
யாரையும் எந்த உயிரையும் கஷ்டப்படுத்தாமல் துன்புறுத்தாமல் வாழ வேண்டும் என்று வாழ்ந்து வருகிறார் விஜய் கனிஷ்கா.
இந்த சமயத்தில் மர்மமான முறையில் விஜய் கனிஷ்காவிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அவரின் அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனை கேட்டதும் அதிர்ச்சியாகும் விஜய் கனிஷ்கா, காவல்துறை உயரதிகாரியான சரத்குமாரிடம் போய் செல்கிறார். இந்த வழக்கை சரத்குமார் எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அம்மா மற்றும் தங்கையை காப்பாற்ற நினைத்தால், வட சென்னையில் மிகப்பெரும் ரெளடியாக வலம் வரும் கருடன் ராமை கொலை செய்ய வேண்டும் என்று கடத்தியவர் தொலைபேசியில் சொல்கிறார்.
ராமை கொலை செய்யவில்லை என்றால் அம்மாவை கொலை செய்து விடுவேன் என்று விஜய் கனிஷ்காவை மிரட்ட, அம்மாவின் உயிரைக் காப்பாற்ற ராமை கொலை செய்துவிடுகிறார் விஜய் கனிஷ்கா.
அதோடு நிறுத்தி விடாமல், மருத்துவராக வரும் கெளதம் கார்த்திக்கையும் கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
அவரை கொலை செய்து தனது குடும்பத்தை விஜய் கனிஷ்கா காப்பாற்றினாரா இல்லையா.? எதற்காக இந்த கொலைகளை அந்த மர்ம நபர் செய்ய சொல்கிறார்? என்பதே “ஹிட் லிஸ்ட்” படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பாளர் : இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
இணை தயாரிப்பு : ஆர்.ஜி.சி ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு : ராம் சரண்
இசை : சி சத்யா.
இயக்கம் : சூரியக்கதிர் காக்கல்லர் கே-கார்த்திகேயன்
படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம் திரைக்கதை வசனம் : சூரியக்கதிர் காக்கல்லர்
கதை : எஸ் தேவராஜ்
கலை : அருண்சங்கர் தரை
சண்டை பயிற்சி : விக்கி பீனிக்ஸ் பிரபு பாடல் வரிகள் : கார்த்திக் நேதா
ஒலி வடிவமைப்பு : லட்சுமி நாராயணன் ஏ.எஸ்
ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே
ஆடைகள் : வி.மூர்த்தி
ஒப்பனை : கோதண்டபாணி
படங்கள் : விஜய்
விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக் தயாரிப்பு நிர்வாகி : ஜே.வி.பாரதிராஜா மக்கள் தொடர்பு : ரியாஸ் K அகமது