கடந்த மே 24ஆம் தேதி தனியார் பால் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றசாட்டை முன்வைத்திருந்தார். அதை தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது தனியார் பால் நிறுவனங்களை ஆதாரமின்றி விமர்சனம் செய்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அமைச்சர் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.