பார்க்கிங் இல்லாத ஹோட்டல்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கார், வாகனங்களை நிறுத்த வசதியில்லாத உணவகங்கள், ரெஸ்டாரண்ட், ஹோட்டல்களை உடனடியான மூடுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன நிறுத்த வசதியில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஹோட்டல்களில் வாகன நிறுத்தம் செய்வதற்கான வசதிகள் இல்லை. ஹோட்டல்களில் வாகன நிறுத்தம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறியிருந்தார். வாகன நிறுத்தம் இல்லாத ஹோட்டல்களை மூட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிமம் வழங்கும் போது வாகன நிறுத்தம் உள்ளதா என மாநராட்சி ஆய்வு செய்ததா. வழக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலுவையில் இருந்தும் மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். எத்தனை முறை அறிவுறுத்தியும், வாகன நிறுத்தம் அமைக்காததால், அந்த ஹோட்டல்களை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாகன நிறுத்தம் இல்லாததால் ஆயிரம் விளக்கில் உள்ள ஹோட்டல் சரவணபவனுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.