நம்மில் பலர் முளைகட்டிய பயறுகள் அல்லது தானியங்கள் போன்றவற்றை தொடர்ந்து உண்பது மிகவும் ஆரோக்கியமானது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையா? சரி வாங்க பார்க்கலாம்.
முளைகட்டிய தானியங்கள் என்பது வெளிச்சம் மற்றும் ஈரப்பதத்தினால் முளைக்கத் தொடங்கிவிட்ட விதைகள் ஆகும். முளைகட்டிய பச்சைப் பயறு, கடலை பயறு மற்றும் சில பருப்புகள் கூட சாலட் மற்றும் பிற உணவுகளில் தற்போது பொதுவாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
பெற்றோர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் எப்போதுமே குழந்தைகளை முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமானது என்பதால் உண்ணுமாறு கூறிவந்திருக்கிறார்கள். பின்னர் இந்த முளை கட்டிய பயறுகள் சாண்ட்விச் போன்ற மென் உணவுகளிலும் பயன்படுத்துகின்றனர் என்பதுடன் அது அவற்றை மேலும் சுவையாகவும் செய்கின்றன.
நாம் ஏற்கனவே கூறியதுபோல் இவை செடியாக வளராத துவங்கிவிட்ட விதைகள் ஆகும். இந்த செயல்முறையில் விதைகளுக்குள் பல்வேறு நொதிகள் உற்பத்தியாகி விதைகள் செடியாக வளர உதவுகின்றன. முளைகட்டிய பயறுகள் வளர்ச்சிக்கான நொதிகளை அதிகம் கொண்டிருப்பதால் அவை மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தவை எனப்படுகின்றன.
உலர்ந்த விதைகளை ஒப்பிடுகையில் இந்த நொதிகள் மனிதன் உடலில் முளைகட்டிய விதைகளை எளிதில் ஜீரணமாக்கவும் உதவுகின்றன.
பல ஆய்வுகளும் இதில் நடத்தப்பட்டு முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டிருப்பதாகவும் முடிவுகள் கூறுகின்றன. எனவே நீங்கள் தைரியமாக ஒரு கிண்ணம் நிறைய முளைகட்டிய தானிய சாலட்டை உண்டு உங்கள் ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.