பெண் குழந்தை பெற்ற தேசிய விளையாட்டு வீராங்கனைக்கு, போன் மூலம் கணவர் ‛தலாக்’ சொன்ன விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.,யில் உள்ள அம்ரோகா எனும் ஊரை சேர்ந்த சியும்ளா ஜாவேத் தேசிய வலை பந்து வீராங்கனை. தேசிய போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை விரும்பாத அவரது கணவர், போனில் ‛முத்தலாக்’ கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சியும்ளா, இவ்விஷயத்தில் உ.பி., முதல்வர் தலையிட வேண்டும் என சியும்ளா கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் ஆக்ராவை சேர்ந்த மற்றொரு பெண், இரட்டை பெண் குழந்தை பெற்றதால், அவருக்கும் அவரது கணவர் ‛தலாக்’ கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.