ஹேப்பி ராஜ் விமர்சனம்

மரியராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், அப்பாஸ், மதுரை முத்து, ஸ்ரீ கௌரி பிரியா,  ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து, மகேஷ் தேவி, அதிர்ச்சி அருண், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹாப்பி ராஜ்.

கணவன் மனைவியாக இருக்கும் கீதா கைலாசத்திற்கும், ஜார்ஜ் மரியனுக்கும் பல வருடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு பிறந்த மகன் தான் ஜி.வி பிரகாஷ். அதனால் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள் ஜிவி பிரகாஷ் மீது. 

ஜார்ஜ் மரியானின் சிறு வயதிலிருந்தே குதிரை முட்டை குதிரை முட்டை என்று கிண்டல் செய்கிறார்கள் ஊரில் உள்ளவர்கள். இருப்பினும் நன்றாக படித்து பள்ளியில் ஆசிரியராகவும் ஆகிவிடுகிறார் ஜார்ஜ் மரியான். 

ஜிவி பிரகாஷையும் நன்றாக படிக்க வைக்கிறார். சிறு வயது வரை தந்தையை அனைவரும் கேலி செய்வதால் தந்தை மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டிருக்கிறது. 

ஜிவி பிரகாஷின் காதல் தோல்விக்கும் ஜார்ஜ் மரியான் காரணமாக இருக்க அவரை விட்டு பிரிந்து விலகி இருக்க முடிவெடுத்து பெங்களூர் சென்று வருகிறார் வேலைக்காக. 

தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் நாயை கௌரி பிரியாவுடன் நட்பாக பழகி பிறகு காதலாக மாறுகிறது. 

அப்பாஸின் மகளாக வரும் கௌரிப்பிரியா பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கிறார். ஜிவி பிரகாஷின் வேலைத்திறமையால் அவரை தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார் அப்பாஸ்.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய அப்பாவை பற்றி கூறினால் இந்த திருமணம் நடக்காது என்று யோசிக்கும் ஜீவி பிரகாஷ், என்ன நடந்தாலும் பரவாயில்லை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை கௌரி பிரியாவிடமும் அப்பாஸிடமும் காண்பிக்கிறார்.

அவர்களும் ஓகே சொல்லிவிடுகிறார்கள். இதனால் ஜார்ஜ் மரியம் அப்பாஸை பார்ப்பதற்காக தன்னுடைய சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு நேரில் வருகிறார்.

அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டு, சார்ஜ் மரியணை மரியாதை குறைவாக நடத்தி பிரச்சனையாகி விடுகிறது. இதனால் திருமணம் என்று போகிறது. ஜார்ஜ் மரியம் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அப்பாஸ் கூறுகிறார். ஜார்ஜ் மரியனும் அப்பாஸ் பெண்ணிடம் வந்து மன்னிப்பு கேட்டால் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வேன் என்று கூறுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? ஜிவி பிரகாஷ் கௌரி பிரியா திருமணம் நடந்ததா? இல்லையா? அப்பாஸ் ஜார்ஜ் மரியானிடமும் ஜார்ஜ் மரியான் அப்பாஸிடமும் மன்னிப்பு கேட்டார்களா? இல்லையா? என்பதே ஹேப்பி ராஜ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : மரியராஜா இளஞ்செழியன் 

இசை : ஜஸ்டின் பிரபாகர் 

ஒளிப்பதிவு : மதன் கிறிஸ்டோபர்

படத்தொகுப்பு : செல்வா ஆர் கே 

மக்கள் தொடர்பு : ரேகா