இல்லாமையை இல்லாமல் ஆக்கும் பக்ரீத் நாளில் சாதி,மதங்களை கடந்து சகோதர மனப்பான்மையுடன் பகிர்ந்தளித்து வாழ்வதே சிறப்பம்சம்.
பரந்து விரிந்த இந்தியாவில் வேற்றுமை கடந்து அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வு பக்ரீத் நாள் முதல் மலர வேண்டும். மத ஒற்றுமையில் நாம் உலக அரங்கில் தலைநிமிர வேண்டும்.
எது நடந்ததோ; அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ;அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ; அதுவும் நன்றாகவே நடக்கும், என்ற அசையாத இறை நம்பிக்கையுடன், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மனதில் நிறுத்தி வாழ்ந்தால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் மேம்பட்டு ஐ.நா. மன்றத்தில் விரைவில் நாம் வல்லரசாய் விளங்குவோம்.
இந்த நன்னாளில் அனைவருக்கும் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் இதயம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.