அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கத்தில், நான்ஸி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அரந்தாங்கி நிஷா ஆகியோர் நடிப்பில் நாளை வெளிவர உள்ள படம் கட்ஸ்.
நாயகன் ரங்கராஜ் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் தன்னுடைய சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்து விடுகிறார். ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து படித்து காவல் துறை அதிகாரி ஆகிறார்.
அதே ஆசிரமத்தில் வளர்ந்த நான்சியை திருமணம் செய்து கொண்டு அங்கிருக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். யார் அவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணையை ஆரம்பிக்கிறார் ரங்கராஜ்.
விஏஓ வான திருநங்கையை தான் கொலை செய்துள்ளனர் என்று கண்டுபிடித்த ரங்கராஜ் அவரை கொலை செய்தவரையும் கட்டி பிடித்து சிறையில் அடைக்கிறார் அவர் ஒரு தொழிலதிபர்.
அந்த தொழிலதிபர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை உபயோகப்படுத்தி ஒரு மணி நேரத்திலேயே திரையில் இருந்து வந்து விடுகிறார்.
சிறையிலிருந்து வந்தது மட்டுமல்லாமல் தன்னை கைது செய்த ரங்கராஜை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அந்தத் தொழிலதிபர் ரங்கராஜை பழி வாங்கினாரா? இல்லையா? ரங்கராஜின் வாழ்க்கையில் அதன் பிறகு நடந்தது என்ன? சிறு வயதிலேயே ரங்கராஜன் அம்மா அப்பா இறப்பதற்கு காரணம் என்ன? என்பதே கட்ஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ரங்கராஜ்
ஒளிப்பதிவு : மனோஜ்
இசை : ஜோஸ் பிராங்கிளின்
தயாரிப்பு : ஜெயபாரதி ரங்கராஜ்
சண்டை : ஆக்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

