பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, மன்சூரலிகான், ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ் நடிப்பில் எஸ்.கல்யாண் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘குலேபகாவலி’.
சில கடத்தல் வேலைகளை மன்சூரலிகானை தலைவராக கொண்டு செய்து வருகிறார் கதாநாயகன் பிரபு தேவா. பார்ட்டி ஒன்று முடிந்து வெளியே வரும்போது ஹன்சிகாவை சந்திக்கும் பிரபு தேவா, ஹன்சிகாவின் அழகில் மயங்கி காதலிக்கிறார். ஹன்சிகாவும் ஒரு திருடி என்று தெரிய வருகிறது.
இச்சமயத்தில் மெக்சிகோ நாட்டில் வசித்து வரும் மதுசூதனராவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, குலேபகாவலி என்ற கோயில் வளாகத்தில் புதைத்து வைத்திருக்கும் விலை மதிக்க முடியாத வைரக் கல்கள் அடங்கிய ஒரு பெட்டி குறித்து தகவல் கிடைக்கிறது.
ஆபத்தான இடத்தில் இருக்கும் அந்த பெட்டியை எடுக்கும் பொறுப்பை மதுசூதன ராவ், தனது மச்சான் ஆனந்த் ராஜிடம் வழங்குகிறார். ஆனந்தராஜ் தனக்கு உண்மையாக இருக்கும் முனீஸ்காந்திடம் அந்த பொறுப்பை கொடுக்கிறார். அந்த பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கும் முனீஸ் காந்துடன் திருடர்களான பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் ரேவதியும் சேர்ந்து கொள்கிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் அந்த பெட்டியை தனதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளில் ஏற்ப்படும் கலகலப்புகளும், போராட்டங்களும், திருப்பங்களுமே, ’குலேபகாவலி’.
ஆனந்த் ராஜ், மதுசூதன் ராவ், முனீஸ் காந்த், மன்சூரலிகான், ‘யோகி’ பாபு, வேலா ராமமூர்த்தி, ‘மொட்டை’ ராஜேந்திரன், மற்றும் படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்