புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்படக் கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் தலைமையிலான குழு அழகேசன், ஆனந்தன், விஜயராஜ், ரோசாரியோ,ஜான் விக்டர் – புதிய உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
திரு ராமசந்திரன் அவர்கள் புகைப்பட கலைஞர், மற்றும் ஒவியக் கலைஞர். உளகளவில் அதிகம் விற்கக்கூடிய புத்தகமான பிளேபாய் புத்தகத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர். மற்றும் உலகின் தலைசிறந்த கலை காட்சியகத்தில் தனது கலை சார்ந்த புகைபடங்களை மக்கள் பார்வைக்கு வைத்தவர். சென்னையில் “தரன்ஷியா” என்ற பெயரில் விளம்பர பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது கலை தாகத்தினால் கலைத்துறை தொடர்பாக ஒர் உலக சாதனை செய்ய திட்டமிட்டார், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார், இதற்கு முன்னால் நடத்தபட்டுள்ள கின்னஸ் உலக சாதனையை தேடி அதில் ஒன்றை முறியடித்து, புதிய சாதனையை நிறைவேற்ற தீர்மானித்துக் கொண்டார்.
அந்த உலக சாதனை 2012 ஆண்டு இங்கிலாந்தில், 5 ஒவியர்கள் 4 மணிநேரத்தில் 680 முகங்களில் ஒவியம் வரைந்தது. அந்த சாதனை முறியடிக்க பல பேர் பல முறை முயன்று தோற்றுவிட்டனர். ராமசந்திரன் அவர்கள் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை உருவாக்க முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் முதலில் தன்னுடன் பங்கு பெற மேலும் 4 ஒவியக்கலைஞர்களை தேர்வு செய்தார். அந்த ஐந்து பேர் ராமசந்திரன், அழகேசன், ஆனந்தன், விஜயராஜ், ரோசாரியோ ஜான் விக்டர்.
ராமசந்திரன் இந்த சாதனையை நடத்தி காட்ட பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது, அதில் ஒன்று எங்கு மற்றும் யார் தன்னை இணைத்து ஒவியத்தை வரைந்து கொள்ள போகிறார்கள். அவர் தன் நண்பர்கள் மூலம் ஏவர்வின் பள்ளி குழுமத்தை அணுகி தன் சாதனை முயற்சியை பற்றி கூறியதும், அதன் நிறுவனர் திரு புருஹோத்தமன் மிக்க மகிழ்ச்சியுடன், தன் பள்ளியில் இடத்தையும் கொடுத்ததோடு நில்லாமல், தனது பள்ளி மாணவர்களை இந்த சமூக நோக்குடனான சாதனை முயற்சியில் ஈடுபடுத்தினார், அனைத்து மாணவர்களும் மிக்க மகிழ்ச்சியோடு பங்கு பெற்றனர்.
இந்த உலக சாதனை முயற்சியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திரு ராமசந்திரனும் அவரது ஒட்டு மொத்த குழுவும் முனைப்பாக ஈடுபட்டனர். ஒவியகலைஞர்கள் அனைவரும் கால நேரம் பாராது பயிற்சிகளை மேற்கொண்டனர். மேனிகுயின் (Mannequin) பொம்மைகளின் முகத்தில் வரைந்து பயிற்சி எடுத்து கொண்டனர்.
சென்னையின் மிக சிறந்த கலை காட்சியகமான “தி ஆர்ட் 41” (THE ART 41) அதன் உரிமையாளர் திரு ஆதவ் அர்ஜீனா மற்றும் திருமதி டெய்ஸி அர்ஜீனா அவர்கள். ராமசந்திரனின் இந்த முயற்சியை அறிந்து, அவர் இந்த உலக சாதனைக்கு நிகழ்த்திகாட்ட துணைநின்றனர்.
தி ஆர்ட் 41 மற்றும் தரன்ஷியா இணைந்து “MOST FACES PAINTED IN 4 HOURS” என்ற உலக சாதனை பட்டத்திற்காக “Medley of Art for World Peace” என்ற உலக சமாதான கருவில், எவர்வின் பள்ளி குழுமத்தின் கொளத்தூர் திடலில், ஜனவரி 10, 2019 நடைப்பெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சி தலைமை தீர்ப்பாளர் மற்றும் கலைத்துறை சார்ந்த திறமையாளர்களின் கண்காணிப்பில், கலைஞர்கள் ஐவரும் மிகுந்த தெளிவோடும், சிந்தனையோடும் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கொடுத்த அத்தனை வரைமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக துவங்கியது.
பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கினைக்க மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு ஒவிய கலைஞர்கள் ஐவரின் திறமையும் ஒன்றினைந்து, மூன்று மணிநேரத்தில் முந்தைய சாதனையான 680 நபர்களை முறியடித்து 700 நபர்களை வரைந்தனர், பிறகு 4 மணிநேர முடிவில் 950 நபர்களின் முகங்களில் ஒவியங்களை வரைந்து புதிய உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.