விஜயகுமாரன் இயக்கத்தில், வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி, கஜராஜா, அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கன்ஷியாம், பேபி சான்ட்ரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் க்ராணி.
குழந்தை ஒன்று கொல்லப்படுகிறது அந்த குழந்தையை கொன்றது மனிதராக மிருகமா என்ற வகையில் காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் திலிபனும், சிங்கம் புலியும் விசாரணையை ஆரம்பிக்கின்றனர்.
இந்த நிலையில் தம்பதிகளாக இருக்கும் அனந்து நாக், அபர்ணா மகன் கன்ஷியாம் மகள் சாண்ட்ரா அவர்களுடன் தங்களுடைய மூதாதையர்கள் வாழ்ந்த பரம்பரை அரண்மனை போன்று தோற்றமளிக்கும் வீட்டை சரி செய்து, அழகுப்படுத்தி அதில் வசிக்கின்றார்கள்.
அவர்கள் வீட்டிற்கு ஊர் தலைவரான கஜராஜ் உதவியோடு வயதான பாட்டியாக இருக்கும் வடிவுக்கரசி வருகிறார்.
மிக வயதான பாட்டியாக இருக்கும் வணிக அரசியல் என்றும் நிலைமையாக இருப்பதற்காக மூன்று குழந்தைகளின் இதயத்தையும் அபூர்வையும் சமைத்து சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்று வீட்டில் இருக்கும் குழந்தைகளை கொன்று அவன் இதயத்தை சமைத்து சாப்பிட திட்டமிடுகிறார்.
வடிவுக்கரசியின் திட்டத்தை விசாரணை மூலம் தெரிந்து கொண்ட திலிபனும் சிங்கம் புலியும் அந்த குழந்தைகளை காப்பாற்றினார்களா? இல்லையா? வடிவுக்கரசியின் நிலைமை என்ன ஆனது? என்பதே க்ராணி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : விஜயகுமாரன் ஒளிப்பதிவு : ஏ மணிகண்டன்
இசை : டாக்டர் செல்லையா பாண்டியன்
படத்தொகுப்பு : எம்.எஸ் கோபி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

