அறிமுக இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில், பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் “குட் டே”.
தங்கள் குடும்பத்தை தன்னுடைய சொந்த ஊரில் விட்டு விட்டு திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார் பிருத்திவிராஜ்.
அங்கேயே ஒரு வாடகை வீடு எடுத்தும் நண்பர்களுடன் தங்கி வருகிறார்.
பிரித்திவிராஜ் பணிபுரியும் பனியன் கம்பெனியில் ஒரு பிரச்சனை ஏற்பட அவரை மேலாளர் அறைந்து விடுகிறார். எல்லோருக்கும் சம்பளம் வந்த பிறகும் பிரித்திவிராஜிற்கு மட்டும் சம்பளம் கிரெடிட் ஆகாமல் இருக்கிறது. அதனை கேட்டு இரவு வரை காத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்குள் ஊரிலிருந்து பணம் அனுப்ப சொல்லி மனைவியிடம் இருந்து போன் வருகிறது.
சம்பளமும் கிரெடிட் ஆகியதும் ஊருக்கு பாதி பணத்தை அனுப்பிவிட்டு மீதி பணத்தை எடுத்துக்கொண்டு மது அருந்துவதற்காக ஒயின் ஷாப் செல்கிறார்.
மது பாட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து குடித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஓடுகின்ற பாட்டை பார்த்துவிட்டு பழைய கல்லூரி தோழி மைனா நந்தினி நினைப்பு வர அவருக்கு போன் செய்து விட்டு கேக் வாங்கிக்கொண்டு மைனா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே அவரிடமும் அவர் கணவர் ஆடுகளம் முருகதாஸிடமும் பிரச்சனை செய்து விட, வெளியில் தள்ளி கதவை சாத்துகிறார்கள்.
மைனாவும் முருகதாசும் போலீஸிடம் புகார் கொடுக்கிறார்கள்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ் பிரித்திவிராஜ் தற்கொலை செய்து கொள்ள நின்று இருப்பதை பார்த்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்.
காவல் அதிகாரி அங்கு பிரித்விராஜை வெளுவெளுவென வெளுத்து வாங்குகிறார். சிறிது நேரத்தில் காவல் துறை அதிகாரி சட்டையை போட்டுக்கொண்டு அங்கிருக்கும் வாக்கி டாக்கி எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார் பிரித்திவிராஜ்.
அதன்பிறகு பிரித்திவிராஜை போலீஸ் மீண்டும் பிடித்ததா? இல்லையா? பிரித்திவிராஜ் மேலும் என்னென்ன பிரச்சினைகளை செய்தார் என்பதே குட் டே படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : மதன் குணதேவ். திரைக்கதை & வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்.
இசை : கோவிந்த் வசந்தா
தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

