குட் பேட் அக்லி விமர்சனம் 3.5/5

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகிபாபு, பிரபு, ஜாக்கி ஷெராப், ப்ரியா பிரகாஷ் வாரியர், சுனில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “Good Bad Ugly”.

பிரபல கேங்ஸ்டர் ஆக மும்பையில் இருக்கிறார் அஜித். த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்க்க செல்லும் அஜித்தை குழந்தையை பார்க்கக்கூடாது தொடக்கூடாது என்றும் ரவுடிசத்தை விட்டு விட்டு வரும்படி திரிஷா சொல்ல, குழந்தைக்காக சத்தியம் செய்துவிட்டு எல்லாவற்றையும் விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் அஜித். 

தன் மகனுக்காக 17 வருடங்கள் ஜெயில் இருக்கிறார் அஜித். ஸ்பெயினில் இருக்கும் திரிஷா மகனிடம் அப்பா பிசினஸ் செய்து கொண்டிருப்பதால் வர முடியவில்லை என்று பொய் சொல்லி கொண்டிருக்கிறார் திரிஷா.

ஒரு நாள் மகன் தன்னுடைய இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் வரவில்லை என்றால் இனி எப்பொழுதும் வர வேண்டாம் என்று அப்பாவிடம் கோபமாக கூற, ஜெயிலிலிருந்து 17 வருடங்கள் கழித்து மகனை பார்க்க வருகிறார் அஜித் குமார். மகனைப் பார்க்கும் வரும் சமயத்தில் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு போகிறார் இதனால் பெரு அதிர்ச்சி அடைகிறார் அஜித் குமார். 

தன்னுடைய மகனை யாரோ வேண்டுமென்றே இந்த வழக்கை சிக்க வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிகிறார் அஜித். தன்னுடைய மகனை யார் எதற்காக சிறைக்கு அனுப்பினார்கள் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? தன்னுடைய மகனை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தாரா? என்பதே குட் பேட் அக்லி படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்

இசை : ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம் 

படத்தொகுப்பு : விஜய் வேலுகுட்டி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா