இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட “கோலி சோடா 2” பாடல்கள் 

இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட “கோலி சோடா 2” பாடல்கள் 

“கோலி சோடா 2” பாடல்களை, இயக்குநர் லிங்குசாமி இன்று வெளியிட்டார். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  இயக்கி சூப்பர் ஹிட்டான படம் ‘கோலி சோடா’. இப்போது, இதன் இரண்டாம் பாகத்தையும் விஜய் மில்டனே தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கிறார்.  

இயக்குநர் கெளதம் மேனன் போலிஸ் அதிகாரியாகவும்,  இயக்குநர் சமுத்திரக்கனி வில்லனாகவும்,  நடித்துள்ளனர். மற்றும் முக்கிய வேடங்களில் செம்பன் வினோத் ஜோஸ், ரோகினி, ரக்‌ஷைதா பாபு, பரத் சீனி, வினோத், சுபிக்‌ஷா, கிருஷா குருப்,  எசக்கி பரத் ஆகியோரும் நடித்துள்ளனர். 

அச்சு இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் ‘பொண்டாட்டியே..’ எனும் சிங்கிள் டிராக்கை மகளிர் தின ஸ்பெஷலாக இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார், அந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  தற்போது, இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களை, இயக்குநர் லிங்குசாமி இன்று வெளியிட்டார். ஜூன் மாதம் 14-ம் தேதி இப்படத்தை வெளியிட செய்யத் திட்டமிட்டுள்ளனர்.